செவ்வாய், 15 டிசம்பர், 2009

மொழிக்கு ஒரு போராட்டம்

மலேசிய அரசியல் குறித்து தமிழக எழுத்தாளர்கள் அறிந்திருப்பது மிக அவசியம் ஆகும். சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியான தமிழ் மொழிக்கு ஏற்படப்போகும் அரசியல் பின்னடைவுகள் குறித்த கட்டுரைகளை உலக வாசகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் வலைத்தல கவனத்திற்கு:
அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. மேலும் வாசிக்க: 1. சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு – மொழி பேரழிவுhttp://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_03.html
.

அன்பு பாலா

உங்கள் உணர்வுகள் எங்களுக்குப் புரியும். ஆனால் எங்கள் ஆட்சியாளர்களுக்குப் புரியாது .. உன்னிப்பாகக் கவனிப்பதாக மட்டும் சொல்வார்கள் ...

இங்கேயும் உயர் கல்வியில் தமிழ் இல்லவே இல்லை. அதற்கான முயற்சியும் இல்லை. இந்த உலகமயம் என்னும் முதலாளியம் மொழியையும் மரபையும் அழிப்பதற்கு நமது அரசியல் தலைவர்கள் உடன் போகிறார்கள் ...

தொடரட்டும் போராட்டம் ....

கு. முத்துக்குமார்

தமிழோசை

கோயம்புத்தூர்

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

நாளும் ஒரு திருக்குறள் -THIRUKKURAL -- A SONNET A DAY

திரு செ . நாராயணசாமி அய்யாவின் நாளும் ஒரு திருக்குறள் – இதழ் 116. திருவள்ளுவர் ஆண்டு 2040, கார்த்திகைத் திங்கள் 20ம் நாள், ஞாயிற்றுக்கிழமை.

தொகுப்பு: 101. நன்றிஇல் செல்வம்.

சமுதாயக் கடமைகளை ஆற்றப் பயன்படாது, பிறருக்கு நன்றி (நன்மை) பயக்காது வீணாக்த் தேங்கி அழியும் செல்வம்.

’நச்சப் படாதான் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத்து அற்று’ குறள் 1008

விரும்பி அணுகமுடியாத ஒருவரிடம் உள்ள செல்வம், நடு ஊரில் எட்டி மரம் பழுத்ததைப் போன்றது. (நச்சம் என்ற சொல் விருப்பம் என்ற பொருள்படும், தெலுங்கு மொழியில் தொடரும் சொல்).

நல்வாய்ப்புத் தருகின்ற செல்வத்தை இடம்கொள்ளாத அளவுக்கு முடக்கி வைத்து, காசேதான் கடவுள் என்று, தானும் துய்க்காது, எவருக்கும் கொடாது இறுகப் பற்றி, நிலைதடுமாறிச் சாய்பவர்கள், அப்பொருளால் பெறும் பயன் ஒன்றுமில்லை. ஈகைப் புகழ் விரும்பாதவர், பிறருக்கு உதவாதவர் வாழ்வு நிலத்திற்குச் சுமை; அவர்பொருள் ஒரு சமுதாய நோய்.

வறியவர் தேவையை நிறைவு செய்யாத செல்வம், அழகும் பண்பும் பெற்றவர் இல்லற வாழ்வைத் துய்க்காது அடையும் முதுமை போன்றது. அன்பை மறந்து, அறத்தை மதிக்காது, தன்னை வறுத்தி சேர்க்கும் பொருள் பலர் கண்ணை உறுத்தி, பிறரால் தட்டிப் பறிக்கப்படும்.

அறனும் இன்பமும் தரும் சமுதாய ஒழுங்கியலில் செல்வம் சேர்ப்பவர்களிடம் தோன்றும் சிறிய வறுமையும் கூட, மழையின்றி நிலம் வறண்டதுபோல் ஆகும்.

THIRUKKURAL -- A SONNET A DAY -- No. 116. December 6, 2009.

CHAPTER 101. FUTILE, DORMANT WEALTH.

Wealth hoarded in strain by misers, neither relished by them nor available to redress dire needs of the distressed, rots and fades away in waste.

‘nachchap padaathavan selvam nadu-vuuruL
Nachchu maram-pazhuththu atRu’ kuraL 1008

Wealth with those, whom people cannot seek, is like
Poisonous fruits of a tree, amidst a commune.

Staking wealth without relishing and fading off, nothing is achieved in worth. Listless existence of a miser, hankering on money as everything in life, is dubious in worth. Avaricious hoarders, ignoring the fame of contribution, are unworthy of their burden on earth. What legacy they can leave behind, who are despised by society as unhelpful misers. Huge wealth not enjoyed or helpful to the needy is a painful slur. Countless millions stashed with those who would neither use nor gift it are of no avail.

Wealth loathing to redress the poor is like a spinster in fine nick, aging in loneliness. Aliens pack of glittering gold hoarded in strain, forsaking love and ignoring virtues. Momentary hardship of benign rich is a drought in seasonal rains.

புதன், 2 டிசம்பர், 2009

நாளும் ஒரு திருக்குறள்-THIRUKKURAL -- A SONNET A DAY

திரு நாராயணசாமி அய்யாவின் நாளும் ஒரு திருக்குறள் – இதழ் 105. திருவள்ளுவர் ஆண்டு 2040, கார்த்திகைத் திங்கள், 9ம் நாள், புதன்கிழமை.

தொகுப்பு: பெண்வழிச் சேறல். (பெண்களிடம் மயங்கி அவர் வயப்படல்).

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமுதாயச் சூழலில் பெண்களின் பெருமையைச் சிறப்பித்துப் போற்றுவதில் வள்ளுவரைவிடத் தெளிவாக, அழுத்தமாகச் சொன்னவர்களைக் காண்பது அரிது. பழங்காலத்தில் மலை, காடுகளில் சுற்றித் திரிந்து வாழ்ந்த மக்கள் படிப்படியாகப் பண்பட்டு, வேளாண்மை தொடங்கி, இல்லறக் குடும்பங்களாக, குழுக்களாக, இனங்களாகச் சமுதாய வாழ்க்கை முறை தொடங்க, பெண்கள் இல்லறப் பொறுப்புகளுடன், பயிர்த்தொழில், கைவினைத் தொழில்களில் ஆண்களுக்கு உதவியாகப் பணியாற்றி வந்தனர். ஆளுமை, அரசியல், வாணிகம் என்ற சமுதாய முறைகளில் ஆணாதிக்கமே ஓங்கி நிலவி வந்தது. அந்தச் அந்தச் சூழலிலும் பெண்களுக்கு மேலான நிலை அளித்துப் போற்றுவது வள்ளுவம்.

’பெண்ணில் பெருந்தக்க யாவுள’ குறள் 54
’பெண்ணே பெருமை உடைத்து’ 907
’பெண்ணில் பெருந்தக்கது இல்’ 1137

பெண்களின் தனிப்பெரும் குணங்களாக ‘கற்பு எனும் திண்மை’, ‘ஒருமை மகளிரே போல’, ‘நாண் எனும் நல்லாள்’, ‘பெண்ணிறைந்தாம் நீர்மை பெரிது’, ’பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப’ எனப்பல சொல்லப்பட்டன. ‘மென்மை மகளிருக்கு வணங்கி’ என்பது புறநானூறு 68.

தொகுதி 91 குறட்பாக்களில் வள்ளுவர் எடுத்துரைப்பது, ஆண்கள் தங்கள் பொறுப்புகள், கடமைகளை மறந்து, பெண்களின் கவர்ச்சியில் மயங்கி தம் நிலை இழந்து சீரழியக்கூடாது என்பதே. இதை ஆண்களுக்கு விடப்பட்ட கடிந்துரையாகக் கொள்வதே சிறப்பு.

’மனையாளை அஞ்சும் மறுமை இலாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று’ குறள் 904

அன்பிற்குரிய மனையாளை அஞ்சவேண்டிய மேலாளர் எனக் கருதி எதிலும் ஒரு நிலையில்லாது உறுதியற்று நடந்தால் எதிர்கால, இன்பமான புனர்வாழ்வு கிட்டாது; வினைகளை வென்று முடிக்கும் ஆற்றலும் இருக்காது. (’மறுமையிலாளன்’ என்பதை மறுபிறவி இன்மை என்று ஆத்தீகர் பொருள் கண்டால் விளக்கம் வினோதமாக அமையும்.)
இல்லாளின் உறவே பெரிதென்று காமுற்று வாழ்தல் ஏற்புடைய செயலாகாது, சிறக்காது. கடமைகளைப் பேணாது ஊக்கமிழந்து பெண்களுக்குப் பின்நிற்பது வெட்கித் தலைகுனிய வைக்கும். மனைவியிடம் தாழ்வு மனப்பான்மை உடையவன் ஆண்மையின் இயல்புக்கு மாறானவன். ஒருவருக்கொருவர் இசைந்து வாழாது செயலிழப்பவர்கள் நன்மக்களுக்குத் தம் கடமைகளைச் செய்ய இயலாது. மேட்டுக் குடிமக்களாக வசதிகளின் உச்சியில் இருந்தாலும் மனையாளின் தோழில் மயங்குபவர் பெருமையும் புகழும் எட்டார்.

ஆராயாது, பெண்களின் ஏவல்களைச் செய்பவர்களைவிட நாணுடன் ஒழுகும் பெண்களே பெருமைக்குரியவர்கள். தன்னறிவிழந்து, பெண்களின் விருப்பப்படியெல்லாம் நடப்பவர்கள் நற்செயல்களையும், தம்மை நாடிவருவோரின் தேவைகளையும் ஆற்ற இயலாது.

பெண்களின் அகந்தையான ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு நடப் பவர்களுக்கு அறத்தின் உறுதியும், செல்வத்தின் பயனும் கிட்டாது; இன்பமான வாழ்க்கையும் அமையாது.

எண்ணிப் பார்க்கும் திறனும், மனப் பண்பாடும் உடையவர்களுக்கு பெண்களிடம் மயங்கி அலையும் அறிவின்மை இராது.

THIRUKKURAl – A SONNET A DAY –No. 105. November 25, 2009.

CHAPTER 91. FEAMALE INFATUATION

To guard against the lure of passion, doting, submission in fear and meek servitude to purveying nature of women; surrendering manliness. This is in no way a reflection on women of modesty; on the contrary urging men to maintain their individuality. Women are held far higher in glory in ThirukkuraL.

‘manaiyaaLai anjum maRumai ilaaLan
vinaiyaaNmai veeru-eaithel intRu’ kuraL 904

One who deems his spouse as boss and purveyor, loses
Happiness in life, and the will to achieve glory.

The lure of passion destroys glory and gains; those caught in it, fail their duties to family and society. Who lurks behind spouse, ignoring duties brings on shame, to hang down his head in honorable society. Lacking compatibility, in meek submission to spouse in fear, one fails his duties to help the good.

People in high society look petty when they behave in abject fear, in the dowsing arms of spouses. Women of modesty are far higher in glory than men who fancy their errands. Governed by the wink of fairy-browed damsels, the weak cannot help out friends in need nor do any good to society. Neither wealth, nor virtue nor happiness resides in people who submit in meek servitude to spouses.
Who have the strength of mind to think and act free do not suffer the folly of doting spouses.

* * * * * * *

நாளும் ஒரு திருக்குறள்: இதழ் 106. திருவள்ளுவர் ஆண்டு 2040, கார்த்திகைத் திங்கள் 10ம் நாள், வியாழக்கிழமை.

தொகுதி 92. வரைவின் மகளிர். (இல்லறம் என்ற வரைமுறைக்கு உட்பட்டு, கற்புடன் வாழாத மகளிர் பொருட்பெண்டிர், விலைமாதர் எனப்படுபவர்).

இதனின் தோற்றப் பின்னணி, பழங்கால பாணர், கூத்தர், விரலியரில் சிலர் பரத்தையராக வாழ்ந்ததும், ஆலையங்களில் இறைச் சேவைகளுக்கு பணிக்கப்பட்ட இளம் பெண்டிர் இசை, கூத்துக் கலைகளில் தேர்ச்சி பெற்று; போற்றி, துதிப் பாடல்களிலும், விழாக்கள், கேளிக்கைகளில் பார்வை யாளர்களை மகிழ்விக்கப் பங்கு பெற்றனர். காலப்போக்கில் அவர்கள் மிட்டா மிராசுகளின் காம வேட்கைக்கு அடிமைப்பட்டு, அறங்காவலர்கள், குருக்களின் ஈடுபாடும், உடந்தையும் அமைய, விலைமாதர் என்ற ஒரு கொடிய சமுதாய முறை வளர்ந்தது. 19ம் நூற்றாண்டு தொடங்கிய சமுதாய சீர்திருத்த இயக்கங்களால் ’தேவதாசி’ முறை ஒடுக்கி அடக்கப் பட்டாலும், விலைமாதர் தொழில் வேறு வடிவங்களில் தொடரும் ஒரு சமுதாய அவலம். இதனை 2000 ஆண்டுகளுக்கு முன்பே இனங்கண்டு அகற்ற முற்பட்டு, ஆண்களைக் கடுமையாக எச்சரித்தது திருக்குறள் கோட்பாடுகள்.

‘பொருட்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டரையில்
ஏதில் பிணம் தழீயற்று’ குறள் 913.

விலைமாதரின் மனம் இணையாத நெருக்கம், இருட்டரையில் அடையாளம் தெரியாத பிணத்தைத் தழுவுவது போல அருவறுக்கத் தக்கது.

மனதில் அன்பில்லாமல், பகட்டான அணிகளுடன், வ்ரவைக் கணக்கிட்டு கபடத்துடன் இனிமையாகப் பேசி, பொருளே குறிக்கோளாகக் கொண்டு பழகும், குடும்பப் பாங்கற்ற பெண்டிரின் மயக்கும் உறவு கேடுசூழும். அறவழியிலான பண்பும், சிறந்தாய்ந்த அறிவும் உடையோர்; தம் உடல், உள்ளம், செல்வத்தைப் போற்றுவோர், பகட்டும் செருக்கும் கொண்ட, பொருளே குறிக்கோளான பரத்தையரின் கீழான இன்பத்தை நாடமாட்டார்கள். நன்மை தீமை ஆய்ந்து அறியாது மயங்குவோருக்கு, மேனி மினுக்கி அழகு காட்டும் கற்பனைப் பெண்டிர் மோகினி போன்றவர்கள்.

இல்லறத்தில் நிறைந்த இன்பம் உற்றவர்களும், மன உறுதி கொண்ட ஆடவரும், அன்பு தவிர்த்து வஞ்சகம் செய்யும் மாய மகளிடம் அறிவையும் செல்வத்தையும் இழந்து, மதுவிற்கும் சூதிற்கும் அடிமைப்பட மாட்டார்கள்.

THIRUKKURAL -- A SONNET A DAY - No. 106

CHAPTER 92: HARLOTS (Women outside the virtue of family bonds)

To keep away from women of banal pursuits, who lure, cajole and trade pleasure of their bodies for material gains. This Chapter warns men against their weaknesses and susceptibility to the lure of harlots, and its ill consequences spoiling mind, body and wealth. KuRaL 1311 castigate men: ‘you have not known chastity; your bosom is exposed to all women to gaze’

‘porut-peNdir poiymai mayakkam iruttaRaiyil
Eathil piNam-thazhie atRu’ kuraL 913

‘The unnatural embrace of hired bellies is like
Contact of alien corpse in darkness’.

Bangle damsels angling material gains have the least of love but cajole by waxing tongue. Beware of whores feigning love, having eyes on gains.

Those seeking the grace of love with the wisdom of a sound mind do not covet pleasures from traders of body for material gains. Who wish to guard their health wealth and fame never embrace vamps of banal pursuits,

Dissatisfied in family life, the unsteady in mind embrace harlots whose interests are focused elsewhere, lest love; the ecstasy and luring embrace of damsels are mystic for those who lack the wisdom of an analytical mind. The bejeweled arms of bellies outside family bonds drown the undetermined in a mire of slush.

False pretensions of harlots, liquor and dice are luring companions of ones whom wealth deserts.


(For those interested in the background position of women in ancient society an elucidation is given below:
Some researchers and literary critics have expressed views that though KuRaL has endowed a honorable place to women in family, their status and participation in social life had not been bright and not brought out clearly, save for some stray cases of poetesses like Avvayaar and Kaakkaippaadiniar and epic characters like KaNNaki, MaNimaekalai. Especially chapters 91 and 92 of kuRaL are cited as showing women in poor light. While applying our thoughts to this aspect it is necessary to look into available information on the social history of Thamizhnadu in the period before and around the time of ThirukkuRaL. In ancient times of civilization men and women worked together outside for sustenance of life, which slowly evolved into families. Towards end of the era of slavery and the beginning of the era of landed gentry, in some stories of the epic Mahabaaratham those about Pandavas-Dhrowpathy, Sudharsan-Oovathi (polyandry), Kavuthamar-Kavuthami, Thurvaasar-Akalikai (free society of tolerance to trafficking) and Jamathakkini-Renuka, (monogamy or chastity - strict adherence to morals in family life) a process of evolution of a close-nit exclusive family system is seen where male domination was gaining an upper hand, by superiority of economic and physical power. In the Thamizh sangam periods before Christian era, when ThirukkuRaL was born, what was the status of women in India? Religious cults like Buddham, SamaNam, Aaryan Sanathanam were invading South India (ancient Thamizhnadu of Dravidian civilization). These religions disdained worldly pleasures an intimacy or equality of ladies. But Thamizh culture was totally different, living life fully for its beauties, including romanticism and family life. This is reflected fully in Thamiz literature of those times:

In the conventional traditions of romantic love and chaste
wedlock, there is parting and reunion in Thamizh culture.
It is real life not mysticism or delusion; Is there such a
medicine in your mystic systems? KuRunthokai

The Sanadhanic system is primarily concerned with mysticism and instability of life; it hates romantic pleasures. Passion of love is the lifeline of nature; it is no stupor or delusion. To understand and enjoy life fully, with proper knowledge of education, Thamizh civilization has evolved and refined a unique tradition of love life (akam) and social life (puram) with grammatical definitions. Part 3 of ThirukkuRaL is an educative treatise on happiness in love life.

In Manu’s codes of the North Indian Aryan style, there is no humanism; due respect and recognition is denied to women; they are treated in slavery as subservient to father, husband, son and other male members, and treated as domesticated animals. Though endowed with six senses, having the unique gift of begetting children; though superior to men in love, kindness, courtesy, considerateness, patience and dedication to service, they have been, and still continue to be treated in conservative societies retarding the path of progress, as servants carrying out the errands of males. The customs of beating, selling, deserting, widowing and destitution of women and totally denying them independence is ingrained in Manu’s codes.

Provoked by this poet Barathi said:

‘Let us clap our hands that we have cut off those
who insist on bringing into the house, the sordid
habit of beating, torturing and tying up cows
in the shed, to subjugate and subdue women’

There is nowhere any reference anywhere in Thamizh culture that women are of a lower category, their relationship itself is bad or that men should not have any contact with them, as Manu has ordained. Seeking desires, inferiority and inability, fear, executing errands on command of women, governed by the wink of damsels are described as the qualities of men surrendering to women. These words and phrases have to be understood in their proper context.

1. Falling in love’s lust (vizhaythal -veezhthal) - seeking in lust and stupor in passion, infatuation. In chapter 120 and other places ‘falling’ has been used to refer to kindness, friendship, desire and romantic love.

2. Losing self, lowering status (thaazhntha iyalbinmai) - inferiority complex, getting inactive and not cultivating the natural qualities and duties of men.

3.. Fearing (anjuthal) - Forgetting that wife is a companion to be loved, obeying her as a manager in command.

4. Fancy errands (yeaval) - to carry out commands and instigations as humble slaves.

5. Governed by the wink (pettaangu ozhukal) - to follow directions as a duty, without concern for good or bad, virtue or folly.

6. Foolishness of doting women (peNsaernthaam paethaimai) - abject dependence on women without the sensibility and faculty to think and act.

What ThirukkuRaL strongly advises against is the slave mentality of humility and obedience to a spouse, without rhyme or reason.

நாளும் ஒரு திருக்குறள் THIRUKKURAL -- A SONNET A DAY

திரு நாராயணசாமி அய்யாவின் நாளும் ஒரு திருக்குறள் – இதழ் 111. திருவள்ளுவர் ஆண்டு 2040கார்த்திகைத் திங்கள் 15ம் நாள், செவ்வாய்க்கிழமை.

தொகுப்பு 96: குடிமை (சமுதாயப் பண்பாடு)

குடிமை என்பது சமுதாய வாழ்க்கை முறை. வீரம், ஊக்கம், ஆற்றல், திறமை, காப்பு, கூட்டுறவு, உழைப்பு, சுறுசுறுப்பு, சேமிப்பு பேன்ற குணங்களைப் பிற உயிரினங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டது மக்களினம். குடிமை, குடிசெயல்வகை, உழவு, தொழில், கைநுட்ப வினைகள் போன்ற பண்பாட்டு வளர்ச்சியின் மூலம் மக்கள் நாகரிகம் வளர்கிறது.

சமுதாய வாழ்க்கைமுறை ஒழுக்கம், வாய்மை, நகை, ஈகை, இன்சொல், நடுவுநிலை, நாணம், பற்று, பணிவு, சால்பு போன்ற குணங்கள் குன்றாமை; குற்றம் நீக்கல், மாசுஇன்மை, இகழாமை, சஞ்சலமின்மை போன்ற பாதுகாப்புகளுக்கும் உறைவிடமாக அமைவது.


பாரம்பரியமிக்க சமுதாயச் சூழ்நிலைகளில் வளர்ந்தவர்களிடம் நடுவுநிலையான பண்பு, தீமைகளுக்கு அஞ்சி வெட்கும் நுண்ணுணர்வும் இயல்பாகவே அமையும்.

’அடுக்கிய கோடி பெரினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்’ குறள் 954.

பற்பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் சமுதாயப் பண்பாட்டில் திளைத்தவர்கள் தங்கள் குடிக்கு இழுக்குதரும் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
வாழ்வில் ஒழுக்கமான நடைமுறை, உண்மையைப் பேணுதல், பழிக்கு நாணுதல் போன்ற பண்புகளுக்கு இழுக்கு வராமல்; இன்முகம், ஈகை, கனிவு, எள்ளாமை கடைப்பிடித்துக் காத்தல் நல்ல சமுதாயக் குடிப் பெருமையின் வெளிப்பாடு. வறுமையால் பிறருக்கு வழங்குதல் குறைந்தாலும், தொன்மைக் குடிப்பெருமையைக் கறைபடியாது காத்து வாழ்பவர், ஈகைப் பண்பிலிருந்து விலகார்.

நல்குடியில் தோன்றியோர், அறியாமையால் சிறிய தவறுகள் செய்தாலும் அவை வான்மதியிலுள்ள கருமைபோல் தெரியும். நற்பண்புகளைப் பேணிக் காக்காமை, தோன்றிய சமுதாயத்தின் நிலையையே ஐய்யத்திற்கு உள்ளாக்கும். நிலத்தின் வளம், விளைந்த பயிரில் காண்பது போல ஒருவரின் பேச்சு அவர் எத்தகை சமுதாயச் சூழலில் வளர்ந்தவர் என்பதைச் சுட்டும். தீய செயல்களுக்கு அஞ்சி நாணும் பண்பும், அகந்தை நீக்கிய பணிவான போக்கும், குடிப்பெருமையைக் காப்பவை.


THIRUKKURAL -- A SONNET A DAY -- No. 111. December 1, 2009.

CHAPTER 96: NOBILITY OF SOCIETY.

Truth, Discipline, Modesty, Equity, Kindness, Munificence etc. are qualities of ancient societies of traditional values. They are to be cherished and sustained to flourish and preserve civilizations.

Bravery, fervor, skills, sense of security, co-existence, toiling, fight for survival, diligence, habit of saving, calling and sharing and such other traits may be taken to have been acquired by observing other species. Humanity is unique in innovating with the help of reasoning and improving by experience the ways of agriculture, industry, crafts and fine arts; family and social life, orderly community existence, cultivating traditions and evolving civilizations.

The nobility of social life stems from qualities of discipline, veracity, happiness, comradeship, sense of same; and safeguarding form meanness, blame and instability.

‘adukkiya koudi perinum kudippiRanthaar
kuntRuva saeythal ilar’ kuraL 954

People of good social traditions shun blemishes
Even in the face of baits of many millions.

Equity and modesty naturally reside in a family of traditional heritage. Natural traditions of nobility of a family and society with pleasant, munificent courtesy, despite ways and means, save the virtues of discipline, truth and modesty. Purity and virtues of family life disdains cunning deeds unworthy of dignity and honor.
Defects in people of prestigious descent appear prominent as dark spots on the moon. Indifference and callousness to manners expose family honors to doubt.
Health of plants, reveal richness of the soil; social values ring in positive tongues. All good and gains sprout from modesty of acts; glory of a traditional society shines in humility.
· * * * * * *
நாளும் ஒரு திருக்குறள் -- இதழ் 112. திருவள்ளுவர் ஆண்டு 2040, கார்த்திகைத் திங்கள் 16ம் நாள், புதன்கிழமை.

தொகுப்பு: 77. மானம் (தன் நிலையில் தாழாத பண்பு)

பண்டைத் தமிழர் நாகரிகத்தின் ஒப்புயர்வற்ற சிறப்பாக விளங்குவது ‘மானம்’. இதற்கு இணையான பொருள்தரும் சொற்களைப் பிற மொழிகளில் காண்பது அரிது. மான் இனத்திடமிருந்து மானத்தை மக்கள் கற்ற வழக்கை குறட்ப்பா 969 சுட்டிக் காட்டுகிறது. தம் உடலில் முடிகள் வலிவிழந்து உதிர்வதை எல்லையாக உணர்ந்து கவரிமான் உயிர் நீக்குமாம். இந்த நுட்பமான வாழ்க்கைத் தத்துவம்
மானம் என்ற சொல்லில் பரிணமிக்கிறது. இது மாந்தரின் சிறப்பை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வது.

’மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடுஅழிய வந்த இடந்து’ குறள் 968

தன்னுடைய சமுதாயப் பெருமையும் தகுதியும் கண்ணியமும் அழியும் நிலை தோன்றினால், மானத்தை இழந்து உடம்பை வளர்க்கும் மருந்து தேடி அலையாமல் சாவதே மேலானது.

சிறந்த நன்மைகளைத் தருவதாக இருந்தாலும், தம் நிலையைத் தாழ்த்தும் செயலில் ஈடுபடக்கூடாது. பெருமை கொண்ட வீர வாழ்வை விரும்புவோர் நல்வழிகளையே கடைப்பிடித்துத் தன்மானத்திற்கு இழுக்கு வராமல் செயல்படுவர். செல்வமும், புகழும் பெருகிவரும் காலத்தில் பணிவும், நிலை மாறும்போது பிறருக்குத் தாழ்ந்துபோகாத மன உறுதியும் தேவை. சமுதாயத்தின் மதிப்பை இழந்து, வாழத் தகுதி அற்றவர்கள், தலையிலிருந்து நீக்கிய மயிர் அனையர்.


குன்றிமணி அளவேனும் தீமை செய்தால், குன்றுபோல் உயர்ந்தவரும் தாழ்ந்து மானம் இழப்பர். புகழும் இல்லை, செல்லிடத்தில் நல் வாழ்வும் இல்லை; எனில் தம்மை மதிக்காது இகழ்பவர் பின்சென்று ஏன் மானம் துறந்து நிற்கவேண்டும்? அதைவிடத் தன்நிலையில் தாழாது மடிவதே மானமுடைய செயல். அன்னாரின் புகழை உலகம் வணங்கிப் போற்றும்.

THIRUKKURAL -- A SONNET A DAY -- No. 112. December 2, 2009.

CHAPTER 97: SENSITIVITY TO DIGNITY

The unique quality of dignity and honor (maanam for which there appears no single equivalent word in any other language, is variously described as dignity, honor, self-respect), has evolved thro’ long traditions of culture and civilization in the advancement of Thamizh culture. It is held precious than life and denotes non-deterioration in ones status. The word seems to have been derived from kavarimaan, a rare variety of Yak deer that ends its life when it senses its body hair falling due to aging. I very intricate sense of honor is implied in it that, life is not worth when the body is unfit for it. This is on the higher side of human values.

‘marunthou-matRu vuun-oumbum vaazhkai perunthamaimai
Peedu-azhiya vantha idaththu’ kuraL 969

When dignity and honor run the risk of forfeiture
Life as a medicine to nurse body is of no avai.


Even those, indispensably advantageous, give up those affecting dignity. Who pursue valor and fame do not indulge in deeds not befitting their dignity. Humility is the ‘sin qua non’ in prosperity and fame; even in adversities uphold dignity. Decline in status is like hair falling from the head.
A mean act, even tiny like a berry seed, diminishes respect for the mighty like a hill.
There is no sustained pleasure without fame; why then toe and cringe behind the ones who snub in scorn? It is better to die in dignity than hankering after disregard, compromising honor. Those who do not wish to see their honor sink are leading lights, the world adorns and hails.

நாளும் ஒரு குறள் -THIRUKKURAL – A SONNET A DAY

திரு நாராயணசாமி அய்யா அவர்கள் நாளும் ஒரு குறள் மற்றும் அதன் ஆங்கிலக் கவிதை வடிவம் தினந்தோறும் சிறப்பாக வெளியிட்டு வருகிறார்... கற்று பயன் பெறுவோம்..

நாளும் ஒரு திருக்குறள் –இதழ் 113. திருவள்ளுவர் ஆண்டு 2040, கார்த்திகைத் திங்கள் 17ம் நாள், வியாழக்கிழமை.

தொகுப்பு 98: பெருமை.
சமுதாய குணநலன்களில் பெருமை காத்தலின் சிறப்பு. குடிமக்களைப் பேணிக் காக்க வேண்டிய ஆட்சியும், சமுதாயமும் பண்புகளை மறந்து செயல்படல் பெருமை தராது, சிறுமை ஆகும்.

’பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்’ என்ற குறட்பா 972, இயற்கையின் பிறப்பில், உலகியல் வாழ்வில் எல்லோரும் சம உரிமை உடையவர்கள். அவரவரின் தொழில் திறமையினால் பெரும் சிறப்புகள் வேறுபடக் கூடியவை எனத் தெளிவாக, அழுத்தம் திருத்தமாகப் பதித்துள்ளது.

குணங்களை, சாதிகளை இறைவன் படைத்தான் என்ற கீதையின் வாக்கும், மனுவின் கோட்பாடுகளும் தமிழர் பண்பாட்டிற்கு முரணானவை. அறைபறைகள் (துடும்புகள்), நாட்டுப்புறத்தினர், தாழ்த்தி ஒதுக்கப்பட்டோர் (சூத்திரர்), பெண்கள், விலங்குகள் எல்லாமே அடிக்கப்பட வேண்டியவை என்பது மனுவின் கோட்பாடு, வால்மீகி இராமாயணத்திலும் சொல்லப்பட்டது. அரச கட்டளை பெற்றவருடன் கூட மறுக்கும் கணிகைக்கு ஆயிரம் கசையடி என்றது கவுடில்யரின் ‘அர்தசாத்திரம்’. வைதீகர்களின் கருத்துப்படி, ஈட்டேற்றம் (முக்தி) அடையத் தகுதியுடையோர் விந்தியத்திற்கு வடக்கே, இமயத்திற்குத் தெற்கே பிறந்தவர்கள் மட்டுமே. பிற நிலங்களில் வாழ்வோர் வேதிய ஒழுக்கங்களுக்கு ஏற்றவர் அல்லர்.

புத்த சமண சமயங்கள், மேற்சொன்ன அகந்தையை மறுத்து பரந்த மனப்பான்மையைப் போற்றி, எல்லா மக்களையும் தழுவி, சாதி வேறுபாடுகளை ஒழிக்க முற்பட்டதால் பூசல்கள் தோன்றின. சமநிலை பேசிய சமயங்கள், சூழ்ச்சியால் ஒடுக்கப்பட்டு விரட்டப்பட்டது வரலாறு.
‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத்தாழ்ச்சி, உயர்வு பேசல் பாவம்’ என்றார் பாரதி. ‘சாக்குருவி வேதாந்தம், சாதிப்பிரிவு, சமயப் பிரிவுகளும், மூடப்பழக்கங்கள் எல்லாம் ஓடச் செய்தல் வேண்டும்’ என்றார் பாரதிதாசன்.
செயற்கையான வேறுபாடுகளை நீக்கிய , சமநீதிச் சமுதாய முனைவு (social engineering) வெற்றி பெற வேண்டும்.

’பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்’ குறள் 979
பெருமிதம் என்ற விஞ்சிய செருக்கு இல்லாதது பெருமைக் குணம். சிறுமை பெருமிதத்தின் மேலேறிச் சென்று கெடும். கற்றவன் என்பதும், செயற்கரிய செய்யலும் பெருமை. எல்லாம் தெரிந்தவன் என்பது பெருமிதம். கற்றது கைமண்ணளவு என்பது அடக்கமுடைமை.

நன்மையுற வாழ்வோம் என்பது புகழ்ச்சி. ஊக்கமிழந்து உய்வோம் என்பது இகழ்ச்சி. செல்வத்தில் மிதந்தாலும் குணத்தில் இழிந்தவர்கள் கீழோர்; வறுமையிலும் குணம் போணுவோர் மேன்மக்கள். நல்வழிகளைப் பின்பற்றாத சிறுமதியினரை சிறப்பான நிலையில் வைத்தாலும் வரம்பு மீரிச் செயல்படுவர்.

பெருமை குணம் என்றும் பணிவை அணிகலனாகக் கொள்ளும்; சிறுமை தன்னைத்தானே வியந்து பாராட்டும். பெருமை பிறருடைய குறைகளைப் பெரிதுபடுத்தாது; சிறுமதி பறைசாற்றும்.

THIRUKKURAL – A SONNET A DAY – No. 113. December 2, 2009

CHAPTER 98. PROTECTION OF PRIDE IN GREATNESS.

Legitimate pride resides safeguarded in greatness, virtues, veracity and skills, contra-distinct from vanity, pettiness and meanness.

Kural couplet 972 stresses that, ‘all lives on earth are born with equal rights; merits vary according to vocational skills. This is a basic code against artificial and selfish discrimination of caste, creed, descent and vocations, enunciated in Manu’s codes, referred to Bhagavat Gita also (Ch 4- 1,6, 13, 14, Ch.7- 12, 14, Ch.18- 41, 44), that God created arbitrary racial systems of four castes, and three unalterable categories (of people-viz. Virtuous, Passionate and Ignorant). Epic Ramayana by Valmeeki states that drums, rustics, outcasts and women are fit to be beaten like animals. Kaudilya’s Arthasastra says that harlots who refuse to extend pleasure to commandeer of the king are to be punished by whipping thousand times. According to Sanadhanic cult, people born between Himalayas and Vindhya mountains alone are eligible to practice Vedic rituals and attain salvation at the feet of God.
These are totally contrary and alien to Thamizh culture and Dravidian civilization which have fostered from ancient times equality of status and opportunities for every one in the social order. Conflicts started when other religions like Buddhism and Jainism in the North refuted and challenged the audacious attitude of Sanadhanis, encompassed all people spreading the concepts of equality. It is history that the conventionalists convinced and conspired with ruling clans, suppressed and drove out by cruel force, Buddhism and contained Jainism; spread to the South and did considerable damage, dissection and degradation to the social and cultural values and cohesiveness of Thamizh Dravidian civilization. It was only in the later parts of 19th and 20th centuries that renaissance and rationalist movements started in Thamizh Naadu to retrive the language and cultural values of the past, as a mission at social engineering.
Poet ManounmaNiyam Sundaranaar said: ‘One who has clearly studied and understood ThirukkuraL will never think of Manu’s discriminatory codes of justice varying caste-wise.
Poet Barathi said: ‘There are no casts; it is a sin to classify and discriminate people on the basis of birth’.
Poet Barathidaasan said: ‘Philosophy of the owls, caste differences, religious divisions, faulty codes, faltering justice, blind habits all are to be driven out by hard efforts’.

‘perumai perumitham inmai siRumai
Perumitham vuurnthu vidal’ kuraL 979

Greatness, sans vanity, is just pride; pettiness
Rides in boastful joy, on offensive vanity.

Strength of pure mind is light of greatness; life devoid of just pride is baneful. Wealth alone is not great; the honest maintain virtues even in extreme privation. Greatness, like chastity, has to be guarded by discipline and veracity. Great deeds are achieved by rare skills, acting with pride on a mission of fulfillment. Greatness always bows in dignified modesty; meanness revels in self-acclaimed vanity. To be learned is legitimate pride; to proclaim greatness with pride, is vanity; to be aware that what we know is only handful is modesty.

The pride of greatness does not expose weaknesses; vanity of smallness proclaims in vilification.