புதன், 19 மே, 2010

கள்ளிப்பட்டி - ஈரோடு மாவட்டம்


என் ஊர்

வானளாவிய மலைகள்
விடுதலையாய் யானைகள்
கூட்டம் கூட்டமாய் மான்கள்

அடர்ந்த காடுகள்
சிறகு விரிக்கும் மயில்கள்
ஓடி விளையாடும் முயல்கள்

வேளாண் தோட்டங்கள்
ஓயாமல் உழைக்கும் மனிதர்கள்
பலன் பார்க்கா கால்நடைகள் ..

நெருங்கிய வீடுகள்
வயல்களையே நம்பும் மக்கள்

வளைந்து நெளிந்த பாயும் வாய்க்கால்கள்
உற்சாக எதிர் நீச்சல் மீன் குஞ்சுகள்
சுகமான குளியலில் எருமைகள்

பச்சை போர்த்திய வயல் வெளிகள்
நெற்பயிரிநூடே ஊர்ந்து விளையாடும் நண்டுகள்
வரும்வரை காத்திருக்கும் செங்கால் நாரைகள்

சல சலத்து ஓடும் வாணி நதி
பிரிந்து பின் சேரும் இடை மணல் வெளி

தமிழர்களின் நிலப்பிரிவு
குறிஞ்சி முல்லை மருதம்
நெய்தல் பாலை அனைத்தும் ஒருங்கே ...

இவையனைத்தும் எனதல்ல எனினும்
இவையின்றி நானில்லை...

4 கருத்துகள்:

 1. //இவையனைத்தும் எனதல்ல எனினும்
  இவையின்றி நானில்லை...//

  உண்மைதானுங்க.... வாங்க வணக்கம்....

  பதிலளிநீக்கு
 2. Your birth place has been depicted very well by your sweet words....I felt that I have roamed your village while I was reading your words....wonderful and great...

  And I congratulate for your achievement in the academic field, and I hope the knowledge that you created will be an asset for the coming generation,really I am very proud to call you Dr. Muthu kumar.

  பதிலளிநீக்கு
 3. எளிமையான தெள்ளிய நீரோடைபோல் மிக இயல்பாய் அமந்து. இயற்கையும் தானும் கலந்த உறவை நுட்பமாக்குகிறது. சிற்பியின் ஒரு கிராமத்து நதியை நினைவூட்டுவதோடு என் மண்வாசத்தையும் உயிர்பிக்கிறது.

  பதிலளிநீக்கு