ஞாயிறு, 16 மே, 2010

இனிய இரவு


இரவு

நாம் உறங்காத இரவே

உலகை உணர்த்தும் பகல்

உண்மை உலகின் வெளி

பகலின் வெளிச்சம் இருள்

பொய்யான ஆரவாரங்கள் ஆர்பாட்டங்கள்

போலியான் நாடகங்கள் முகமூடிகள்

உள்ளத்தின் உண்மைகள் கனவுகளாய்
அத்து மீறிய எண்ணங்கள் நினைவுகளாய்

எவ்வளவைச் செரிக்கும் இந்த இரவு ...

சூரியனை அறிமுகபடுத்திய இந்த இரவு
சூரியனால் அறிய முடியுமா?

உலகமே உறங்கும்போது
விழித்திருக்கும் இரவு

1 கருத்து:

  1. //சூரியனை அறிமுகபடுத்திய இந்த இரவு
    சூரியனால் அறிய முடியுமா?
    //

    அருமை

    உண்மையிலேயயே இருளே நிரந்தரம் வெளிச்சம் என்பது தற்காலிகமானதே

    நல்ல கவிதை

    பதிலளிநீக்கு