மலேசிய அரசியல் குறித்து தமிழக எழுத்தாளர்கள் அறிந்திருப்பது மிக அவசியம் ஆகும். சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியான தமிழ் மொழிக்கு ஏற்படப்போகும் அரசியல் பின்னடைவுகள் குறித்த கட்டுரைகளை உலக வாசகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் வலைத்தல கவனத்திற்கு:
அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. மேலும் வாசிக்க: 1. சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு – மொழி பேரழிவுhttp://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_03.html.
அன்பு பாலா
உங்கள் உணர்வுகள் எங்களுக்குப் புரியும். ஆனால் எங்கள் ஆட்சியாளர்களுக்குப் புரியாது .. உன்னிப்பாகக் கவனிப்பதாக மட்டும் சொல்வார்கள் ...
இங்கேயும் உயர் கல்வியில் தமிழ் இல்லவே இல்லை. அதற்கான முயற்சியும் இல்லை. இந்த உலகமயம் என்னும் முதலாளியம் மொழியையும் மரபையும் அழிப்பதற்கு நமது அரசியல் தலைவர்கள் உடன் போகிறார்கள் ...
தொடரட்டும் போராட்டம் ....
கு. முத்துக்குமார்
தமிழோசை
கோயம்புத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக