திரு நாராயணசாமி அய்யாவின் நாளும் ஒரு திருக்குறள் – இதழ் 111. திருவள்ளுவர் ஆண்டு 2040கார்த்திகைத் திங்கள் 15ம் நாள், செவ்வாய்க்கிழமை.
தொகுப்பு 96: குடிமை (சமுதாயப் பண்பாடு)
குடிமை என்பது சமுதாய வாழ்க்கை முறை. வீரம், ஊக்கம், ஆற்றல், திறமை, காப்பு, கூட்டுறவு, உழைப்பு, சுறுசுறுப்பு, சேமிப்பு பேன்ற குணங்களைப் பிற உயிரினங்களைப் பார்த்துத் தெரிந்து கொண்டது மக்களினம். குடிமை, குடிசெயல்வகை, உழவு, தொழில், கைநுட்ப வினைகள் போன்ற பண்பாட்டு வளர்ச்சியின் மூலம் மக்கள் நாகரிகம் வளர்கிறது.
சமுதாய வாழ்க்கைமுறை ஒழுக்கம், வாய்மை, நகை, ஈகை, இன்சொல், நடுவுநிலை, நாணம், பற்று, பணிவு, சால்பு போன்ற குணங்கள் குன்றாமை; குற்றம் நீக்கல், மாசுஇன்மை, இகழாமை, சஞ்சலமின்மை போன்ற பாதுகாப்புகளுக்கும் உறைவிடமாக அமைவது.
பாரம்பரியமிக்க சமுதாயச் சூழ்நிலைகளில் வளர்ந்தவர்களிடம் நடுவுநிலையான பண்பு, தீமைகளுக்கு அஞ்சி வெட்கும் நுண்ணுணர்வும் இயல்பாகவே அமையும்.
’அடுக்கிய கோடி பெரினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்’ குறள் 954.
பற்பல கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் சமுதாயப் பண்பாட்டில் திளைத்தவர்கள் தங்கள் குடிக்கு இழுக்குதரும் செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
வாழ்வில் ஒழுக்கமான நடைமுறை, உண்மையைப் பேணுதல், பழிக்கு நாணுதல் போன்ற பண்புகளுக்கு இழுக்கு வராமல்; இன்முகம், ஈகை, கனிவு, எள்ளாமை கடைப்பிடித்துக் காத்தல் நல்ல சமுதாயக் குடிப் பெருமையின் வெளிப்பாடு. வறுமையால் பிறருக்கு வழங்குதல் குறைந்தாலும், தொன்மைக் குடிப்பெருமையைக் கறைபடியாது காத்து வாழ்பவர், ஈகைப் பண்பிலிருந்து விலகார்.
நல்குடியில் தோன்றியோர், அறியாமையால் சிறிய தவறுகள் செய்தாலும் அவை வான்மதியிலுள்ள கருமைபோல் தெரியும். நற்பண்புகளைப் பேணிக் காக்காமை, தோன்றிய சமுதாயத்தின் நிலையையே ஐய்யத்திற்கு உள்ளாக்கும். நிலத்தின் வளம், விளைந்த பயிரில் காண்பது போல ஒருவரின் பேச்சு அவர் எத்தகை சமுதாயச் சூழலில் வளர்ந்தவர் என்பதைச் சுட்டும். தீய செயல்களுக்கு அஞ்சி நாணும் பண்பும், அகந்தை நீக்கிய பணிவான போக்கும், குடிப்பெருமையைக் காப்பவை.
THIRUKKURAL -- A SONNET A DAY -- No. 111. December 1, 2009.
CHAPTER 96: NOBILITY OF SOCIETY.
Truth, Discipline, Modesty, Equity, Kindness, Munificence etc. are qualities of ancient societies of traditional values. They are to be cherished and sustained to flourish and preserve civilizations.
Bravery, fervor, skills, sense of security, co-existence, toiling, fight for survival, diligence, habit of saving, calling and sharing and such other traits may be taken to have been acquired by observing other species. Humanity is unique in innovating with the help of reasoning and improving by experience the ways of agriculture, industry, crafts and fine arts; family and social life, orderly community existence, cultivating traditions and evolving civilizations.
The nobility of social life stems from qualities of discipline, veracity, happiness, comradeship, sense of same; and safeguarding form meanness, blame and instability.
‘adukkiya koudi perinum kudippiRanthaar
kuntRuva saeythal ilar’ kuraL 954
People of good social traditions shun blemishes
Even in the face of baits of many millions.
Equity and modesty naturally reside in a family of traditional heritage. Natural traditions of nobility of a family and society with pleasant, munificent courtesy, despite ways and means, save the virtues of discipline, truth and modesty. Purity and virtues of family life disdains cunning deeds unworthy of dignity and honor.
Defects in people of prestigious descent appear prominent as dark spots on the moon. Indifference and callousness to manners expose family honors to doubt.
Health of plants, reveal richness of the soil; social values ring in positive tongues. All good and gains sprout from modesty of acts; glory of a traditional society shines in humility.
· * * * * * *
நாளும் ஒரு திருக்குறள் -- இதழ் 112. திருவள்ளுவர் ஆண்டு 2040, கார்த்திகைத் திங்கள் 16ம் நாள், புதன்கிழமை.
தொகுப்பு: 77. மானம் (தன் நிலையில் தாழாத பண்பு)
பண்டைத் தமிழர் நாகரிகத்தின் ஒப்புயர்வற்ற சிறப்பாக விளங்குவது ‘மானம்’. இதற்கு இணையான பொருள்தரும் சொற்களைப் பிற மொழிகளில் காண்பது அரிது. மான் இனத்திடமிருந்து மானத்தை மக்கள் கற்ற வழக்கை குறட்ப்பா 969 சுட்டிக் காட்டுகிறது. தம் உடலில் முடிகள் வலிவிழந்து உதிர்வதை எல்லையாக உணர்ந்து கவரிமான் உயிர் நீக்குமாம். இந்த நுட்பமான வாழ்க்கைத் தத்துவம்
மானம் என்ற சொல்லில் பரிணமிக்கிறது. இது மாந்தரின் சிறப்பை உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்வது.
’மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடுஅழிய வந்த இடந்து’ குறள் 968
தன்னுடைய சமுதாயப் பெருமையும் தகுதியும் கண்ணியமும் அழியும் நிலை தோன்றினால், மானத்தை இழந்து உடம்பை வளர்க்கும் மருந்து தேடி அலையாமல் சாவதே மேலானது.
சிறந்த நன்மைகளைத் தருவதாக இருந்தாலும், தம் நிலையைத் தாழ்த்தும் செயலில் ஈடுபடக்கூடாது. பெருமை கொண்ட வீர வாழ்வை விரும்புவோர் நல்வழிகளையே கடைப்பிடித்துத் தன்மானத்திற்கு இழுக்கு வராமல் செயல்படுவர். செல்வமும், புகழும் பெருகிவரும் காலத்தில் பணிவும், நிலை மாறும்போது பிறருக்குத் தாழ்ந்துபோகாத மன உறுதியும் தேவை. சமுதாயத்தின் மதிப்பை இழந்து, வாழத் தகுதி அற்றவர்கள், தலையிலிருந்து நீக்கிய மயிர் அனையர்.
குன்றிமணி அளவேனும் தீமை செய்தால், குன்றுபோல் உயர்ந்தவரும் தாழ்ந்து மானம் இழப்பர். புகழும் இல்லை, செல்லிடத்தில் நல் வாழ்வும் இல்லை; எனில் தம்மை மதிக்காது இகழ்பவர் பின்சென்று ஏன் மானம் துறந்து நிற்கவேண்டும்? அதைவிடத் தன்நிலையில் தாழாது மடிவதே மானமுடைய செயல். அன்னாரின் புகழை உலகம் வணங்கிப் போற்றும்.
THIRUKKURAL -- A SONNET A DAY -- No. 112. December 2, 2009.
CHAPTER 97: SENSITIVITY TO DIGNITY
The unique quality of dignity and honor (maanam for which there appears no single equivalent word in any other language, is variously described as dignity, honor, self-respect), has evolved thro’ long traditions of culture and civilization in the advancement of Thamizh culture. It is held precious than life and denotes non-deterioration in ones status. The word seems to have been derived from kavarimaan, a rare variety of Yak deer that ends its life when it senses its body hair falling due to aging. I very intricate sense of honor is implied in it that, life is not worth when the body is unfit for it. This is on the higher side of human values.
‘marunthou-matRu vuun-oumbum vaazhkai perunthamaimai
Peedu-azhiya vantha idaththu’ kuraL 969
When dignity and honor run the risk of forfeiture
Life as a medicine to nurse body is of no avai.
Even those, indispensably advantageous, give up those affecting dignity. Who pursue valor and fame do not indulge in deeds not befitting their dignity. Humility is the ‘sin qua non’ in prosperity and fame; even in adversities uphold dignity. Decline in status is like hair falling from the head.
A mean act, even tiny like a berry seed, diminishes respect for the mighty like a hill.
There is no sustained pleasure without fame; why then toe and cringe behind the ones who snub in scorn? It is better to die in dignity than hankering after disregard, compromising honor. Those who do not wish to see their honor sink are leading lights, the world adorns and hails.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக